எல்லை நிர்ணய செயன்முறை மீண்டும் திருத்தப்பட வேண்டும் – வஜிர

97 0

எல்லை நிர்ணய செயன்முறை மீண்டும் திருத்தப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

சனத்தொகை மற்றும் புவியியல் இருப்பிடத்திற்கு ஏற்ப இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காலியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களின் எல்லை நிர்ணய நடவடிக்கை பாரிய அநீதியை இழைத்துள்ளதாக மேலும் குறிப்பிட்டுள்ளார்.