3 ஆவது யூனிட் செயலிழப்பு : மின்சாரத்தை தடையின்றி வழங்க நடவடிக்கை !

110 0

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் 3 ஆவது யூனிட் செயலிழந்துள்ளது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

யூனிட் 3 தேசிய மின்கம்பத்துடன் மீண்டும் இணைக்கப்படும் வரை மின்சாரம் தடையின்றி வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

குறிப்பாக மின்சார சபைக்கு சொந்தமான டீசல் மற்றும் எரிபொருள் எண்ணெய் மின் நிலையங்கள் பயன்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூன்றாவது மின் உற்பத்தி அலகு செயலிழந்த காரணத்தினால் மின்வெட்டு இருக்காது எனவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர உறுதியளித்துள்ளார்.