உர விநியோகம் நாளை முதல் தொடங்குகிறது

105 0

உலக உணவு மற்றும் விவசாய அமைப்பினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட 36,000 மெற்றிக் தொன் உர விநியோகம் நாளை (20) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

உரிய உர இருப்பு இன்று (19) பிற்பகல் இலங்கையிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட உள்ளதாக அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, யாழ் பருவத்தில் நெற்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் உரம் இருப்பு விநியோகிக்கப்பட உள்ளதாகவும் செயலாளர் குறிப்பிட்டார்.