மாமனிதர் சாந்தன் அவர்களுக்கு பெல்ஜியத்தில் வணக்கம் செலுத்தப்பட்டது.

375 0

தமிழீழ விடுதலைக்கு தனது சிம்மக் குரலால் உரம் சேர்த்த மாமனிதர் சாந்தன் அவர்களுக்கு பெல்ஜியத்தில் வணக்க நிகழ்வு நடைபெற்றது. இவ் நிகழ்வில் உணர்வோடு சங்கமித்த உறவுகள் மாமனிதர் திருவுருவப்படத்துக்கு மலர் தூவி சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தினார்கள். தன்னிகரில்லா சிறந்த பாடகராக தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு மகத்தான தனது கடமையை செலுத்திய மாமனிதர் சாந்தன் அவர்களை நினைவுகூரும் முகமாக கவிதைகள் , நினைவும் பகிர்வும் நிகழ்வுகள் இடம்பெற்றன.