யேர்மன் தமிழ்ப்பெண்கள் அமைப்பின் முன்னெடுப்பில் வாகைமயில் 2023 ம் ஆண்டுககான நடனதெரிவுப்போட்டிகள் என்னப்பெற்றால் நகரில் 18.03.23 சனிக்கிழமை ஆரம்பமானது. காலை 10.00 மணிக்கு மங்களவிளக்கேற்றலுடன் ஆரம்பமானது. ஆரம்பபிரிவு கீழ்ப்பிரிவு மத்தியபிரிவு மேற்பிரிவு அதிமேற்பிரிவு ஆற்றுகைத்திறன்முடித்த மாணவர் வரை பிரிவுகள் வகுக்கப்பட்டு நடனதெரிவுப்போட்டிகள் நேற்றையதினம் ஆரம்பமானது.
ஏராளமான போட்டியாளர் கலையார்வத்துடன் வாகைமயில் தெரிவுப்போட்டிகளில் போட்டிகளில் பங்குபற்றினார்கள். நடைபெற்றபோட்டிகளில் முதல்மூன்று இடங்களைப்பெற்ற கலைஞர்கள் 25.3.23 நடைபெறவுள்ள நிறைவுப்போட்டியில் பங்குகொள்வார்கள். 25.3.23 அன்று என்னப்பெற்றால் நகரில் வாகைமயில் நடனப்போட்டியின் நிறைவுப்போட்டி நடைபெறவுள்ளது.