யாழ்ப்பாணத்தில் படித்தவர்கள் பண்பாக நடந்தால் எந்தவொரு பிரச்சனையும் வராது

119 0

யாழ்ப்பாணத்தில் படித்தவர்கள் எல்லாம் பண்பாக நடந்தால் எந்த ஒரு பிரச்சனையும் வராது என கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் வேண்டுகோளுக்கு இணங்க தனியார் நிறுவனம் ஒன்றினால் அமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையினை  வைபவரீதியாக திறந்து வைத்த பின்  சிறப்புரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்

எங்களிடத்தில் ஆசன போட்டி இடம்பெறுகின்றதே தவிர எங்களிடத்தில் ஒற்றுமை இல்லை யாழ்ப்பாணத்தில் படித்தவர்கள் எல்லாம் பண்பாக நடந்தால் எமக்கு எந்த ஒரு பிரச்சனையும் வராது

வரலாறுகளை கைவிட்டு விட்டோம் எங்களுடைய வரலாறுகளை பேணி பாதுகாக்க வேண்டும் வார்த்தைகளில் பிரயோசனம்  இல்லை செயல் வீரர்கள் தான் வேண்டும், அரசியலுக்கு அப்பால் வள்ளுவனுக்கு ஒரு அருமையான சிலை வைத்துள்ளார்கள்.

எங்களுக்கு ஒரு குறையும் இல்லை. கடவுள் எங்களை கைவிடவில்லை நாங்கள் அடித்து துரத்தப்பட்டு அவலப்பட்டு ஒரு சிறு பையோடு புலம் பெயர்ந்த  சமூகம் இன்று கோடான கோடியை கொடுத்து இந்த மண்ணில்  எவ்வளவு கோயில்களை கட்டுகிறார்கள்.

பாடசாலைகளை அலங்கரிக்கிறார்கள் எப்படி எல்லாம் வாழ்ந்த கிராமங்களை எழுச்சி பெற  செய்கின்றார்கள். இன்று கடவுள் அருளால் கடல் கடந்து கண்டம் கடந்து போனவர்களுக்கு இன்றைக்கு ஒரு சக்தி பிறந்திருக்கிறது.

இன்று ஆட்சியாளர்கள் நாடு கூட அவர்களை தான் தேடுகின்றார்கள். இந்த நாட்டினுடைய அரசு புலம்பெயர் தமிழர்களை கூப்பிடுகிறது.

நீங்கள் முதலிட்டால் இந்த நாடு நிமிருமென்று. எனவேதான் இந்த நாட்டை அடகு வைத்தவர்கள் அடகை மீட்பதற்கு யாரை கூப்பிடுகிறார்கள் என்றால் அவலப்பட்ட தமிழர்களைத்தான் இன்றைக்கு கூப்பிடுகின்றார்கள் அழுத எமது கண்ணீருக்கு தீர்வு கிடைத்திருக்கின்றது எனவே நாங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.