நாங்கள் சிதறுண்டுபோவதற்கு முன்னர் சர்வதேச நாணயநிதியம் கைகொடுக்கும்!

145 0

சர்வதேச நாணயநிதியம் போன்ற பன்னாட்டு நிதி அமைப்புகள் முன்வைத்துள்ள மாற்றங்களை மக்கள்  மத்தியில் எவ்வாறு கொண்டு செல்வது என்பதே அரசாங்கம் எதிர்நோக்கும் பெரும் சவால் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் ஓஆர்எவ் அமைப்பின் சுனில்ஜோசியுடனான கலந்துரையாடல் ஒன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்

இதேவேளை பன்னாட்டு அமைப்புகளும் மக்களினதும் நாட்டினதும் பொறுமைக்கு எல்லையுண்டு என்பதை உணர்ந்துகொள்ளவேண்டும்.சோர்வு உண்டாகின்றது. என அவர் தெரிவித்துள்ளார்.

உலகின் பல நாடுகளில் நடந்ததை போல நாங்கள் சிதைந்துபோவதற்கு முன்னர் அவர்கள் வருவார்கள் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

 

 இலங்கை இன்றைய நிலைக்கு வந்தது எப்படி?

பதில்-இது மோசமான கொள்கைகள் மோசமான கடன் மற்றும் சூழ்நிலை ஆகியவற்றின் கலவை ஆகும்.

சூழ்நிலைகள் என்பதன் அர்த்தம் என்னவென்றால் கொவிட் பெருந்தொற்று ஏற்பட்டது.

கொவிட் பெருந்தொற்று பரவத்தொடங்கியதும் தனது அந்நிய செலாவணிக்காக சுற்றுலாத்துறையை நம்பியிருந்த நாடுகளை அது கடுமையாக பாதித்தது – சுற்றுலாத்துறையை பாதித்தது.

மேலும் உலகம் முழுவதும் அதிகரிக்கும் எரிபொருள்விலைகள் போன்றவை  – எங்கள் நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சியடைய தொடங்கியவேளை அவை பெரும் பிரச்சினையாக மாறின.

மேலும் நீண்டகாலமாக தவறான கொள்கைகள் காணப்பட்டனஇ நலன்புரி நடவடிக்கைகளை அடிப்படையாக கொண்ட அரசாங்கம் மக்கள் ஆதரவு அல்லது மக்களை கவரும் கொள்கைகள் போன்றவற்றை வரிசலுகைகள் நடைமுறைக்கு வந்த பின்னர் தொடர்ந்து பேண முடியவில்லை.

ஆகவே இலங்கையின் இன்றைய நிலை என்பது மேலே குறிப்பிடப்பட்ட மூன்று விடயங்களின் கலவையே.

சர்வதேச நாணயநிதியத்தின் நிபந்தனைகள் என்ன? சர்வதேச நாணயநிதியத்தின் நிதி உதவியை பெறுவது குறித்து எவ்வளவு நம்பிக்கை கொண்டுள்ளீர்கள் அது உண்மையில் உதவிகரமானதாக காணப்படுமா?

பதில்- ஆம் சர்வதேச நாணயநிதியத்தின் நிதி உதவி எங்களிற்கு உதவும் என நான் கருதுகின்றேன்.

வங்குரோத்து நிலையை அடைந்த அல்லது கடன்பேண்தகு தன்மையை இழந்துள்ளதாக அறிவிக்கப்பட்ட  நாட்டை பிணைமீட்கும் சர்வதேச நாணயநிதியத்தின் நடவடிக்கைகளை பொறுத்தவரை.

இதற்குள் இரண்டு அம்சங்கள் உள்ளன ஒன்று இருதரப்பு கடன் வழங்கிய நாடுகளிடமிருந்து நீங்கள் கடன் உத்தரவாதங்களை பெறவேண்டும் இது மிகவும் சவாலான விடயம்.

மற்றையது சர்வதேச நாணயநிதியத்துடனான பணியாளர் மட்ட உடன்படிக்கையின் படி நாங்கள் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் சில உள்ளனஇ நாங்கள் அந்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம் – 15 நடவடிக்கைகள்

உதாரணத்திற்கு சுயாதீனமான மத்திய வங்கி போன்றவை நாங்கள் அவை அனைத்தையும் செய்துள்ளோம்.

இவை அனைத்தையும் நாங்கள் சர்வதேச நாணயநிதியத்துடன் இணைந்து அல்லது சர்வதேச நாணயநிதியம் இல்லாமல் செய்திருக்கவேண்டும்.

இவை மக்கள் ஆதரவை பெற்ற நடவடிக்கைகள் இல்லாவிட்டாலும்  நாட்டிற்கு மிகவும் சிறந்தவை.

ஆனால் இந்த சீர்திருத்தங்களை எப்படி மக்களிடம் கொண்டு போய்சேர்க்கப்போகின்றோம் என்பதே பிரச்சினை ஏனென்றால் இவை மக்களை நேரடியாக பாதிக்கப்போகின்றன.

இதுவரை காலமும் நாங்கள் என்ன செய்தோம் என்றால் பணத்தை அச்சடித்தோம்இஅதனால் பணவீக்கம் அதிகரித்தது மேலும் நலன்புரி அரசாங்கமே ஒரேயொரு வழி என மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தினோம்.

ஆனால் பேண் தகு வருமான மாதிரி  இல்லாவிட்டால் இதனை தொடர முடியாது என்பது எங்களிற்கு தெளிவாக தெரிகின்றது.

ஆகவே நாங்கள் சீர்திருத்தங்களை முன்னெடுக்கின்றோம்  இவற்றை மக்களிடம் கொண்டுசெல்வது கடினமாக உள்ளது ஏனென்றால் இது மக்களை நேரடியாக பாதிக்கின்றது.

அதேவேளை சர்வதேச நாணயநிதியம் என்பது நாட்டிற்கு பெரும் நம்பிக்கையை கொண்டுவரும்- எங்களிற்கு நிதிசந்தைக்கான வாய்ப்பினை மீண்டும் தரும்.

மேலும் கடந்த வருடம் முதல் முடங்கிப்போயுள்ள முதலீடுகளை மீண்டும் கொண்டுவரும்.

நாங்கள் தொடரும் பேச்சுவார்த்தையின் இறுதி கட்டத்தில் இருக்கின்றோம்இஆகவே இந்த மாதத்திற்குள் ஈஎவ்எவ் கிடைக்கும் என நம்பிக்கை கொண்டுள்ளோம்.

அந்த பணம் பெரும் மாற்றங்களைஉண்டுபண்ணப்போவதில்லை ஆனால் அந்த நம்பிக்கை பல வழிகளை திறக்கும்.

 

பணவீக்கம் குறைவடைகின்றது முதலீடுகள் வருகின்றன என நீங்கள் தெரிவிக்கும் மாற்றங்கள் நீண்டகாஅளவில் இடம்பெறக்கூடியவை

சர்வதேச நாணயநிதியத்தின் பிணைமீட்பு நடவடிக்கைகள் உதவிகள் போன்றவற்றின் அனுபவங்கள் இது சிலகாலம்பிடிக்ககூடிய நடவடிக்கை என்பதை புலப்படுத்துகின்றது.

இருதரப்பு அமைப்புகளினால் முன்வைக்கப்பட்டுள்ள இந்த மாற்றங்களை மக்கள் முன் கொண்டு செல்வதற்கு அரசியல் வெளியை எவ்வாறு கையாளப்போகின்றீர்கள்- பல நாடுகள் இதனை செய்வதில் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன.

ஆகவே நீங்கள் என்ன சவால்களை எதிர்கொள்கின்றீர்கள் இதனை எவ்வாறு கையாளப்போகின்றீர்கள்?

சர்வதேச நிதியமைப்புகள் முன்வைக்கின்ற மாற்றங்களை எப்படி முன்னெடுக்கப்போகின்றீர்கள்  என்ன சவால்களை எதிர்கொள்கின்றீர்கள்?

 

பதில்-  இது நாங்கள் தற்போது எதிர்கொண்டுள்ள பெரும் கேள்வி.

இந்த சீர்திருத்தங்கள் சில மிகவும் அவசியமானவை ஆனால் இவற்றை முன்னெடுப்பது மக்கள் மத்தியில் கொண்டு செல்வது மிகவும் கடினமாக உள்ளது.

ஆனால் அதிஸ்டவசமாக சுற்றுலாத்துறை மீண்டும் உயிர்பெற்றுள்ளது.அதன் காரணமாக குறிப்பிடத்தக்க அளவு வெளிநாட்டு நாணயம்  நாட்டிற்குள் வருகின்றது.

மேலும் அர்த்தமற்ற விதத்தில் அனைத்து பொருட்களையும் இறக்குமதி செய்வதை தடுப்பதற்காக இறக்குமதி கட்டுப்பாடுகளை நாங்கள் விதித்துள்ளோம்.

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் உரிய வழிவகைகள் மூலம் தங்களின் பணத்தை அனுப்புகின்றனர்- 95 வீதமாக காணப்பட்ட பணவீக்கத்தை 50 வீதமாக கட்டுப்படுத்தியுள்ளோம்.ஆகவே குறுகிய காலத்தில் நிலவரம் சிறந்ததாக காணப்படுகின்றது ஆனால் நாங்கள் இன்னமும் நெருக்கடியிலிருந்து மீளவில்லை.

ஆனால் முன்னோக்கி போகும்போது மிகப்பெரும் சவால் என்னவென்றால் மக்கள் எல்லாவற்றையும் விரைவில் மறந்துவிடுவார்கள்.

கடந்த மார்ச் மே மாதத்தில் மக்கள் எங்களை இந்த நீண்டவரிசைகளில் இருந்து காப்பாற்றுங்கள் என தெரிவித்தார்கள்.எங்களிற்கு வேறு எதுவும் தேவையில்லை நாங்கள் உங்களை பார்த்துக்கொள்வோம் என தெரிவித்தார்கள்.

நாங்கள் தற்போது அவர்களை நீண்டவரிசையிலிருந்து மீட்டுவிட்டோம் இந்த மாற்றங்கள் இடம்பெறுகின்றன  இவை அவர்களிற்கு பாதிப்பை தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.எங்கள் அனைவரையும் இந்த மாற்றங்கள் பாதிக்கின்றன.

உங்களின் நாடு 90களின் ஆரம்பத்தில் இந்த துன்பத்தை அனுபவித்தது – துன்பமின்றி எதனையும் பெற முடியாது.ஆகவே இந்த கட்டத்தில் தான் நாங்கள் இருக்கின்றோம்

இந்த மாற்றங்களை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கவேண்டியச வால்களை எதிர்கொள்கின்றோம்.

இதேவேளை பன்னாட்டு அமைப்புகளும் மக்களினதும் நாட்டினதும் பொறுமைக்கு எல்லையுண்டு என்பதை உணர்ந்துகொள்ளவேண்டும்.

சோர்வு உண்டாகின்றது.

கடந்த ஒருவருடகாலமாக நாங்கள் சர்வதேச நாணயநிதியத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக களைப்புணர்வு  உருவாகிவருகின்றது.

ஆகவே சர்வதேச நாணயநிதியம் வரும் ஏனையவர்கள் வருவார்கள் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.  உலகின் பல நாடுகளில் நடந்ததை போல நாங்கள் சிதைந்துபோவதற்கு முன்னர் அவர்கள் வருவார்கள் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

சம்பளம் போன்றவை இல்லாமல் எங்கள்  அரசசேவை சீர்குலைந்தால்  வங்கிகள் வீழ்ச்சியடைந்தால்  இராணுவத்தினர் செயல்இழந்தால் அதன் பின்னர் நீங்கள் வந்து காப்பாற்றுவதில் எந்த அர்த்தமும் இல்லை.

ஏனென்றால் அது திருத்தமுடியாத நிலைஆகவே அவர்கள் தங்கள் அணுகுமுறையை புதுப்பித்துக்கொள்ளவேண்டிய தருணம் இது. உரிய தருணத்தில் அவர்கள் வரவேண்டும்- மிகவும் தாமதமாவதற்கு முன்னர்.

சர்வதேச அமைப்புகளின் கொடுப்பனவுகளை பெற்ற பல நாடுகளின் அனுபவமாக இது காணப்படுகின்றது- சர்வதேச அமைப்புகள் இடம்பெறும் அரசியல்மாற்றங்களை கருத்தில்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு காணப்படுகின்றது – அரசியல் பொருளாதாரம்அவர்கள் தாங்கள் கற்கவேண்டிய பாடங்களை கற்கின்றார்களா?

நீங்கள் தெரிவித்த ஒரு விடயம் இடம்பெற்றால்கூட அது சர்வதேச அமைப்புகள் எதிர்பார்க்கும் விளைவுகளிற்கு எதிர்மாறான விளைவுகளை உருவாக்கும். நிலைமை மோசமடையும் முன்னேற்றமடையாது

பதில்

உங்களின் கேள்வி மிகச்சரியாது நாங்கள் இதனைதான் தெரிவிக்கின்றோம்.

புவிசார் அரசியல் கட்டுப்பாடுகள் மாறுபட்ட கருத்துக்கள் இந்த விடயத்தை கையாளவேண்டும் பாரம்பரிய கடன் வழங்குநர்கள் இல்லாதவர்களை எவ்வாறு கையாளவேண்டும் என்பது உட்பட பல விவாதங்கள் காணப்படுகின்றன.

ஆனால் இந்த சந்தர்ப்பத்தில் நான் இந்தியாவிற்கு நன்றி தெரிவிக்கவேண்டும்இலங்கையின் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கை விடயத்தில் இந்தியா தலைமைத்துவம் வழங்க முன்வந்ததுஅவர்கள் பாரம்பரிய கடன்வழங்குநர்கள் இல்லை.

ஆனால் அவர்கள் முன்வந்து முதல் உத்தரவாதத்தை வழங்கினார்கள் அது பாரிஸ் கிளப் தனது உத்தரவாதத்தை வழங்கவேண்டிய நிலையை ஏற்படுத்தியது.

சீனா உத்தரவாதத்தை வழங்கியுள்ளது ஆனால் அது முழுமையானது இல்லை ஆனால் நாங்கள் அவர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளோம்.

ஆனால் அவ்வாறான நிலை காணப்பட்டாலும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகின்ற வரை பன்னாட்டு கடன்கொடுப்பனவாளர்கள் நெகிழ்ச்சி தன்மையுடன் இருக்கவேண்டும் எங்களிற்கு இதனை செய்யவேண்டும்.

இல்லாவிட்டால் நீங்கள் சொன்னது போல  பொறுமை குறைந்துகொண்டுபோகின்றது- நிர்வாகிகள் என்ற அடிப்படையில் நாங்கள் களைப்படைந்துள்ளோம்.

பொறுமையாக இருங்கள் அதுவருகின்றது என நாங்கள் எங்கள் மக்களிடம் தெரிவித்துவருகின்றோம்.

டிசம்பரில் கிடைக்கும் ஜனவரியில் கிடைக்கும் பெப்ரவரியில் கிடைக்கும் என நாங்கள் தெரிவித்து வருகின்றோம் – தற்போது மார்ச் மாதம்.

ஆகவே இதற்கு அப்பால் மிகவும் கடினமாகயிருக்கபோகின்றது.

இலங்கையில் ஸ்திரதன்மையை ஏற்படுத்துவதுதான் அவர்களின் இறுதி இலக்கென்றால் நோக்கம் என்றால்  நாட்டை மீட்சி பாதையில் செலுத்தி இறுதியில் நாட்டை வளர்ச்சி பாதையில் செலுத்துவதுதான் அவர்களின் நோக்கம் என்றால்

அது உடனடியாக இடம்பெறவேண்டும்

நான்  பெயர் குறிப்பிடவிரும்பாத சில நாடுகளை போல இலங்கையும் சிதைவடைந்தால் அது மிகவும் ஆபத்தானதாக மாறும்.