நாளை மேல் மாகாணத்தில் சயிடத்திற்கு எதிர்ப்பு

259 0

சயிடம் நிறுவன விவகாரம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும், வேலை நிறுத்தப் போராட்டங்களில் அடுத்த கட்டம் மேல் மாகாணத்தில் இடம்பெறவுள்ளது.

இதற்கமைய நாளை மேல் மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளில் இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகச் செயலாளர் சமந்த ஆனந்த தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

இதற்கமைய நாளை காலை 08.00 மணி முதல் இந்த தொழிற்சங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார். அன்றைய தினம் பகல் 01.00 மணியளவில் கொழும்பு தேசிய வைத்தியசாலை முன்பாக ஆரம்பிக்கப்படும் எதிர்ப்புப் பேரணி விஹாரமஹாதேவி பூங்கா வரை செல்லவுள்ளது.

பின்னர் அங்கு அமைக்கப்பட்டுள்ள மேடையில் எதிர்ப்புக் கூட்டத்தை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், சமந்த ஆனந்த சுட்டிக்காட்டியுள்ளார்.