கல்கிசை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இருந்து துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 20 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கல்கிசை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, சீனாவில் தயாரிக்கப்பட்ட பிஸ்டோல் ஒன்றும், அதற்கு பயன்படுத்தப்படும் நான்கு ரவைகளும், ரிவோல்வர் ஒன்றும் அதற்கு பயன்படுத்தப்படும் ஆறு ரவைகளும் நேற்றையதினம் கைப்பற்றப்பட்டன.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் 20 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
நீதிமன்ற வளாகத்தில் இருந்த 9 பேரும், சம்பவம் இடம்பெற்ற வேளை, நீதிமன்றத்திற்கு வந்த 11 பேருமே இவ்வாறு சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி இன்று கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேகநபர்கள் 20 பேரையும் எதிர்வரும் 13ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.