புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படாது : சந்திம வீரக்கொடி

251 0

அரசாங்கம் அரசியல் அமைப்பில் திருத்தங்களை கொண்டு வரும் என பெற்றோலிய வள அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

மாளிகாவத்தையில் அமைந்துள்ள பெற்றோலிய வள அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்…புதிதாக அரசியல் அமைப்பு உருவாக்கப்படாது.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு மக்கள் வழங்கிய ஆணைக்கு அமைய இந்த திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.மக்கள் எதிர்பார்க்கும் விடயங்களே தவிர வேறு எந்த விடயமும் மேற்கொள்ளப்படாது.

ஐக்கிய தேசியக்கட்சி எவ்வாறான கருத்து வெளியிட்டாலும், அரசியல் அமைப்பு முழுமையாக மாற்றம் செய்யப்படாது அவர் தெரிவித்துள்ளார்.