இலங்கைக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் : பிரித்தானியா கோரிக்கை!

266 0

கடந்த 2015 ஆம் ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு, இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று பிரித்தானியா கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தக் கோரிக்கையை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நேற்று உரையாற்றிய, பிரித்தானியாவின், வெளிவிவகார மற்றும் பொதுநலவாய பணியகத்தின், ஆசிய, பசுபிக் விவகாரங்களுக்கான அமைச்சர் அலோக் சர்மா முன்வைத்துள்ளார்.

நல்லிணக்கம், நீதியை நிலைநாட்டுவதற்கு போருக்குப் பிந்திய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் பகுதிநேர அமர்வாக இடம்பெறும் கூட்டங்களில், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை, பிரித்தானிய அமைச்சர் அலோக் பிரசாத் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இலங்கையில் ஆட்சி மாற்றம் இடம்பெற்றதையடுத்து, நல்லிணக்கம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, பிரித்தானிய அமைச்சருக்கு விளக்கமளித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.