ஐஎஸ் தீவிரவாதிகள் என நினைத்து அமெரிக்க படை மீது தாக்குதல் நடத்திய ரஷ்யா

293 0

சிரியாவில் கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க படைகளை, ஐ.எஸ். தீவிரவாதிகள் என நினைத்து தவறுதலாக ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியது.

சிரியாவை மையமாக வைத்து ஐ.எஸ். தீவிரவாதிகள் செயல்பட்டு வருகின்றனர். சிரியாவில் சில கிராமங்களை ஆக்கிரமித்துள்ள  ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக சிரிய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் அமெரிக்கா மற்றும் ரஷ்ய படைகளும்  ஐ.எஸ்.தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தி வருகின்றது.

இந்நிலையில், ஐ.எஸ்.தீவிரவாதிகள் என நினைத்து அமெரிக்க ஆதரவு படைகள் மீது தவறுதலாக ரஷ்ய ராணுவம் வானில் இருந்து  குண்டுமழை பொழிந்ததாக அமெரிக்க வெளியுறவுத்துறையின் மூத்த பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

நேற்று சிரியாவில் உள்ள கிராமத்தை குறிவைத்து ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதலில் சிரிய-அமெரிக்க கூட்டு படையில் சிலர்  காயமடைந்ததாக ராணுவ தலைமைத் தளபதி ஸ்டீபன் டவுண்சென்ட் தெரிவித்துள்ளார். ரஷ்ய தாக்குதல் நடத்தப்பட்ட சில  நேரத்திலேயே ரஷ்ய ராணுவத்தை தொடர்பு கொண்டு தாக்குதலுக்கு அமெரிக்க ராணுவம் முற்றுப்புள்ளி வைத்தது.