கொட்டும் மழைக்கு மத்தியில் பிரான்சில் நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டம்

308 0

சிறீலங்கா ஆக்கிரமிப்புப் படைகளால் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி உள்ள தங்கள் நிலங்களை விடுவிக்கக்கோரி சிறீலங்கா படை முகாமுக்கு முன்னால் தொடர் போராட்டத்தை நடத்தி வரும் கேப்பாப்புலவு மக்களுக்கு ஆதரவாக பிரான்சிலும் தொடர் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.இன்று (01.03.2017) புதன்கிழமை பிரான்சு குடியரசுச் சிலை முன்பாக (Republique)பிற்பகல் 15.00 மணிமுதல் 18.00 மணிவரை கொட்டும் மழைக்கு மத்தியில் கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழீழ மக்கள் பேரவை, தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியவற்றின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப்போராட்டம் இன்றுடன் நிறுத்தப்பட்டு, எதிர்வரும் 27.03.2017 இதேபகுதியில் மாபெரும் ஒன்றுகூடலாக இடம்பெறவுள்ளதாக நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.எதிர்வரும் 06.03.2017 திங்கட்கிழமை ஜெனிவா நோக்கி பிரான்சில் இருந்து பேருந்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. செல்லவுள்ளவர்கள் விரைந்து பயணச்சீட்டுக்களைப் பெற்றுக்கொள்ளுமாறும் கேட்கப்பட்டுள்ளது.

 

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு