மலேஷியாவின் முன்னாள் பிரதமர் முஹைதீன் யாசினிடம் அந்நாட்டு ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
2020 முதல் 2021 வரை 17 மாதங்கள் பிரதமராக பதவி விகித்தவர் முஹைதீன் யாசின் (75).
கொவிட்-19 பரவலைத் தடுப்பதற்காக பயன்படுத்த வேண்டிய அரசாங்க நிதியை முஹையிதீன் யாசினின் ‘பேர்சாட்டு’ கட்சியினர் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
அதையடுத்து, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அலுவலகத்துக்கு யாசின் இன்று அழைக்கப்பட்டு அவிரடம் விசாரணை நடத்தப்பட்டது,
இவ்விசாரணையின் பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாளை வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் என மலேஷிய ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.