இலங்கை கடன் நெருக்கடியிலிருந்து விடுபட உதவுவதற்கு சீனா தயார்

105 0

இலங்கை கடன் நெருக்கடியிலிருந்து விடுபட உதவுவதில் சாதகமான பங்கை வகிப்பதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கடன் மறுசீரமைப்புக்காக எழுத்து மூல உத்தரவு வழங்கப்பட்ட பின்னர் சீனா இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

இலங்கையின் தற்போதைய சவால்களை சமாளிக்கவும், கடன் சுமையை எளிதாக்கவும், நிலையான வளர்ச்சியை அடையவும் உதவுவதில் சாதகமான பங்கை வகிக்க, தொடர்புடைய நாடுகள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக உள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கை தரப்புடன் கடனை அகற்றும் திட்டங்களை விரிவாக விவாதிப்பதுடன் தொடர்புடைய நிதி நிறுவனங்களுக்கு சீனா, ஆதரவளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.