கிளிநொச்சியில் சர்வதே மகளீர் தினத்தையொட்டிய….(காணொளி)

302 0

கிளிநொச்சியில் சர்வதே மகளீர் தினத்தையொட்டிய பெண்;களின் குரலை ஓங்கி ஒலிக்க செய்வதற்கான பிரசார பாதயாத்திரை இன்று நடைபெற்றது.

சர்வதேச மகளீர் தினத்தையொட்டி மகளீர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சால் பெண்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கும் வலுவூட்டுவதற்குமான பல்வேறு செயற்பாடுகளும் வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இவ்வேலைத்திட்டங்கள் மார்ச் மாதம் மதலாம் திகதி முதல் 7ஆம் திகதி வரை  மாவட்ட ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளன.

பெண்களின் குரலை ஓங்கி ஒலிக்க செய்வதற்கான பிரச்சார பாதயாத்திரை இன்று காலை 9.30 மணிக்கு கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திலிருந்து ஏ-9 வீதி வழிவாக டிப்போ சந்தியைச் சென்றடைந்து விழிப்புணர்வுக் கருத்துரைகள் நடைபெற்றன.

இதில் மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், மேலதிக அரச அதிபர் எஸ்.சத்தியசீலன்,  உதவிப்பிரதேச செயலர் ரீ.பிருந்தாகரன், வாழ்வின் எழுச்சி திணைக்களத்தின் மாவட்ட உத்தியோகத்தர் ஆரணி மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.