ரஜரட்டை பல்கலைக்கழக மாணவர்களின் இரண்டு விடுதிகளிலிருந்து எட்டு இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 5 மடிக்கணினிகள் திருடப்பட்டுள்ளதாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ரஜரட்டை பல்கலைக்கழகத்தின் துட்டுகெமுனு மற்றும் பந்துல ஆண்கள் விடுதிகளில் உள்ள கணினிகள் கடந்த 8ஆம் மற்றும் 7ஆம் திகதிகளில் திருடப்பட்டுள்ளதாக மாணவர்கள் குழுவொன்று பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தது.
இந்த நாட்களில் ரஜரட்டை பல்கலைக்கழகத்தில் வருட இறுதிப் பரீட்சைகள் நடைபெற்றுவரும் நிலையில் மாணவர்கள் அறைகளை பூட்டாமல் வெளியேறும்போது கணினிகள் திருடப்பட்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.