சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் அமைப்பினால் விழிப்புணர்வு பேரணி இன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட விழிப்புணர்வு பேரணியானது பெண்கள் சகல உரிமைகளையும் பெற்றவர்களான விளங்க வேண்டும் எனும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.
பேரணியில் ஈடுபட்டவர்கள் தொல்லைகள், வன்முறைகள், போதைவஸ்துக்கள் அற்ற குடும்பமாக வாழ்வோம் எனும் வாசகத்தை தாக்கிய பதாதையை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர்.
விழிப்புணர்வு பேரணியானது யாழ்ப்பாண இலங்கை போக்குவரத்து பேருந்து நிலையத்திலிருந்து ஆரம்பமாகி யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தைச் சென்றடைந்தது.
பேரணியில் யாழ்ப்பாண மாவட்ட உதவி அரசாங்க அதிபர் எஸ்.முரளி காணி, மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.