இரண்டு பிள்ளைகளுடன் செயலகம் முன் அழுத தாய்

275 0

தனது இரு பிள்ளைகளையும் வளர்க்க வழியில்லை எனக்கூறி 34 வயதான தாயொருவர் செவணகல பிரதேச செயலகத்தின் முன்னால் அழுத சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

உடவளவை, தணமல்வில வீதி பிரதேசத்தில் வசிக்கும் பீ.எம் அனோஜா சமன்மலி என்ற குறித்த பெண்ணின் கணவன் தன்னையும் தன் இரு பிள்ளைகளையும் வீட்டிலிருந்து வெளியேற்றி விட்டு வேறொரு பெண்ணுடன் வாழ்வதாகவும் தற்போது தமக்கு இருக்க இடமொன்று இல்லை எனவும் கூறி அழுதார்.

அவரது மகன் எச்.ஆர்.எம். சஸ்மிகா சஹஸ்ர நிம்னேத்துக்கு நான்கு வயது மற்றும் மகள் எச்.ஆர்.எம். யெஹென்ஷா யெனுலிக்கு ஒன்றரை வயதாகும்.

உதவி செய்யக் கூடிய சகலரிடமும் தங்களுடைய துயரத்தை சொல்லியும் வசிப்பதற்கு காணியொன்றைப் பெற்றுத் தருமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு உரிய பதில் கிடைக்கவில்லையென்றும் அதனால் பிள்ளைகள் இருவருடனும் உயிரைத் துறப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.

கணவன் குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்தும் எந்தப் பயனும் இல்லையென்றும் வசிப்பதற்கு இடமொன்று கிடைத்தால் தினக்கூலி வேலை செய்தேனும் வாழ்வோம் என்றும் அவர் கூறினார்.

இரண்டு பிள்ளைகளையும் நன்னடத்தை நிலையத்தில் ஒப்படைக்குமாறு பிரதேச செயலக அதிகாரிகள் கூறியதாகவும், இரண்டு பிள்ளைகள் இல்லாமல் தன்னால் வாழ முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த தாய்க்கு உதவக்கூடியவர்கள் இருப்பின் செவனகல பிரதேச செயலாளருடன் அல்லது  0773855587 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.