கொழும்பு பங்குச் சந்தையின் விலைச் சுட்டெண்களில் இன்று (07) உயர்வு ஏற்பட்டுள்ளது.
அதன்படி, இன்றைய நாள் முடிவில், அனைத்து பங்கு விலை சுட்டெண் 198.02 அலகுகள் அதிகரித்து 9,642.94 அலகுகளாக பதிவாகியுள்ளது.
S&P SL20 குறியீடு 30.96 புள்ளிகளால் உயர்ந்து 2,869.14 அலகுகளாகவும் பதிவாகியுள்ளது.
3.43 பில்லியன் ரூபா பரிவர்த்தனை புரள்வு இன்று பதிவாகியுள்ளது.