பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இன்றைய ஆர்ப்பாட்டம் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

107 0

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தினால் இன்று (07) கொழும்பில் நடத்தப்படவுள்ள ஆர்ப்பாட்டம் தொடர்பில் கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவொன்றை பிறப்பித்துள்ளார்.

அதன்படி இன்று காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், நிதியமைச்சு மற்றும்  காலிமுகத்திடல் ஆகிய பகுதிகளில் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைய தடைவிதித்துள்ளார்.

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே உட்பட 16 மாணவர் சங்கங்களின் செயற்பாட்டாளர்கள் மற்றும் அதில் பங்குபற்றுபவர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.