பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகள் குறைகின்றன!

99 0

பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விற்பனை விலை  20 முதல் 25 சதவீதம் வரை குறைந்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

சந்தையில் ஒரு பாண் 150 ரூபா தொடக்கம் 180 ரூபாவுக்கு  இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுவதாகவும், அந்த விலையை நுகர்வோர் தாங்கிக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிப்புக்கு மின்சாரக் கட்டண  அதிகரிப்பே பிரதான காரணம் எனவும், இதன் காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள 7,000 பேக்கரிகளில் 5,000 பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாகவும் தலைவர் குறிப்பிட்டார்.

மேலும், இவ்வாறான சூழ்நிலையிலும், ரொட்டி, பாண்  மற்றும் இதர பேக்கரி பொருட்களின் விலையை பொதுமக்கள் நலன் கருதி முடிந்தவரை குறைக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றும் அவர்   தெரிவித்துள்ளார்.