காத்தான்குடி கடற்கரை வீதியில் வியாபாரத்துக்காக மோட்டர் சைக்கிளில் 4 கிராம் 770 மில்லிக்கிராம் ஐஸ் போதை பொருளை எடுத்துச் சென்ற நபர் நேற்று (06) கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய அதிரடிப்படை குழுவினர் சம்பவதினமான நேற்று திங்கட்கிழமை மாலை 6 மணியளவில் காத்தான்குடி கடற்கரை வீதியில் பள்ளிவாசலுக்கு அருகாமையில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இதன்போது, மோட்டர் சைக்கிள் ஒன்றில் வியாபாரத்துக்காக 4 கிராம் 770 மில்லிக்கிராம் ஐஸ் போதை பொருடன் பயணித்த வியாபாரியை விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைத்து மடக்கிபிடித்து கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவரையும் ஐஸ் போதை பொருள் மற்றும் மோட்டர்சைக்கிள் ஒன்றையும் அதிரடிப்படையினர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.