பிரித்தானிய மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழாவில் பங்கேற்க இளவரசர் ஹரி தம்பதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியவில் நீண்ட காலம் ராணியாக இருந்த ராணி 2-ம் எலிசபெத் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8 ஆம் திகதி தனது 96 வயதில் மரணமடைந்தார். இதனை தொடர்ந்து 2 நாட்களுக்கு பின் அவரது மகன் மூன்றாம் சார்லஸ் பிரித்தானியாவின் புதிய மன்னராக அரியணை ஏறினார்.
இந்த சூழலில் மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா, மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை உறுதிப்படுத்தியது.
அரசர் மூன்றாம் சார்லஸ் முடிசூட்டு விழாவில் பங்கேற்க இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவியான மேகன் மார்கலே ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள இளவரசர் ஹரி தம்பதி இங்கிலாந்து செல்வார்களா? என்பது பற்றிய தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.
இளவரசர் ஹரி தம்பதிக்கும், அரச குடும்பத்திற்கும் இடையேயான உறவில் தொய்வு ஏற்பட்ட நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள மேகனின் சொந்த ஊருக்கு இளவரசர் ஹரி தம்பதி புலம்பெயர்ந்தனர்.