‘நீதித்துறை நியமனங்கள் திறமை அடிப்படையில் அமைய வேண்டும்’ – கே. அழகரத்தினம்

274 0

நீதித்துறை உயர்பீட நியமனங்களில் அனுபத்தைவிட திறமை மற்றும் ஆற்றலுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென, சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் கே. அழகரத்தினம் தெரிவித்தார்.

முன்னாள் பிரதம நீதியரசர் கே. ஸ்ரீபவம் ஓய்வுபெறும் நிகழ்வின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். குறித்த பிரியாவிடை நிகழ்வில் அவர் மேலும் தெரிவித்ததாவது, “பதவி உயர்வில் சிரேஷ்டத்தை மட்டும் கருதுவது அதிக முக்கியத்துவம் வாய்ந்த நியமாக இருக்கக்கூடாது.

வயது கூடும் போது, முதிர்ச்சியும் ஞானமும் வரலாம். ஆனால், எப்போதும் அப்படியிருப்பதில்லை” என்றார். அத்துடன், சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் நீதிச் சேவை ஆணைக்குழு என்பன முரண்பட்ட விடயமாக இராமநாதன் கண்ணனின் நியமனத்தைச் சுட்டிக்காட்டிய அவர், “நீதிச் சேவை ஆணைக்குழு பரந்துபட்ட சுயாதீன அமைப்பாக இருக்க வேண்டுமெனவும் அதில் சட்ட மா அதிபர், சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் ஆகியோர் இடம்பெற்றிருக்க வேண்டும்” என்றார்.

இதேவேளை, குழப்பமான காலத்தில் முன்வந்து நீதித்துறையின் நேர்மை, கொளரவம் என்பவற்றைப் பேணியதாக முன்னாள் பிரதம நீதியரசர் ஸ்ரீபவனை, சட்டத்தரணிகள் சங்கம் சார்ப்பாகப் பாராட்டிய அவர், “பொறுமை, வெளிப்படைத்தான்மை, தன்னடக்கம் மற்றும் நீதி தவறாமை என்பவற்றைக் கடைப்பிடித்து உங்கள் கடமையை நீங்கள் ஆற்றியுள்ளீர்கள்.

இது, நீங்கள் பதவியேற்றபோது இருந்த நிலைமையுடன் வேறுபட்டிருந்தது” என்றார்.   –