420 பொது நிறுவனங்களில் 32 நிறுவனங்கள் அதிக ஊழல் மற்றும் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியவை என கோப் குழு அடையாளம் கண்டுள்ளதாக இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்தார்.
இந்த நிறுவனங்கள் மூன்று வருடங்களில் 46,500 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊழியர்களைக் கவனிப்பதற்காகவே இன்று சில நிறுவனங்கள் இயங்குவது வேதனையான விடயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வினைத்திறன் அற்ற அரச நிறுவனங்களை வினைத்திறனுள்ள நிலைக்குக் கொண்டு வருவதற்கான பொறிமுறையை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
அரசாங்க வேலைகள் தொடர்பில் முறையான கணக்காய்வு மற்றும் தலையீடு அவசியமானது எனவும் மேற்படி பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.
சில நிறுவனங்கள் பயனற்ற திட்டங்களைக் கொண்டு வந்து பண மோசடி செய்வதாகவும், இந்த நிறுவனங்களைக் காப்பாற்ற தனியார்மயமாக்கல் தீர்வாகாது என்றும் குறிப்பிட்டார்.