க.பொ.த உயர்தரத்தில் தமிழ் பாடத்தினைக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு வழிகாட்டல் கருத்தரங்கு

309 0

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் வடமாகாணப் பாடசாலைகளில் க.பொ.த உயர்தரத்தில் தமிழ் பாடத்தினைக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்குப் புதிய பாடத் திட்டத்துக்கான வழிகாட்டல் கருத்தரங்கினை எதிர்வரும் 04ம், 05ம் திகதிகளில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக வணிக முகாமைத்துவ பீட மண்டபத்தில் நடத்தவுள்ளது.

பாடத்திட்டத்துக்கான வழிகாட்டல் கருத்தரங்கினை காலை 08 மணி முதல் பிற்பகல் 02 மணி வரை நடத்தவுள்ளனர்.

இந்தக் கருத்தரங்கில் பல்கலைக்கழக ஓய்வு நிலைப் பேராசிரியர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து கொள்ளவுள்ளனர்.

குறித்த கருத்தரங்கில் வடமாகாணத்தின் அனைத்து க.பொ.த உயர்தரத் தமிழ்ப்பாட ஆசிரியர்களையும் தவறாது கலந்து கொள்ளுமாறு யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத் தலைவர் பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் கேட்டுள்ளார்.