கொடூரமான நோயால் பாதிக்கப்பட்ட ஜேர்மனியைச் சேர்ந்த உலகப்புகழ்பெற்ற நடிகர்!

210 0

பிரபல ஹாலிவுட் நடிகர் புரூஸ் வில்லிஸ் மென்ஷியா எனும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதை அவரது குடும்பத்தினர் வெளிப்படுத்தியுள்ளனர்.

Die Hard படங்கள் மூலம் ஹாலிவுட்டில் பிரபல கதாநாயகனாக உயர்ந்தவர் புரூஸ் வில்லிஸ். ஜேர்மனியின் Idar-Oberstein நகரில் பிறந்த புரூஸ் வில்லிஸிற்கு 67 வயதாகிறது. அவர் தற்போது டிமென்ஷியா எனும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

அவரது குடும்பத்தினர் இதனை கொடூரமான நோய் என்று குறிப்பிடுகின்றனர்.

இந்த நோய் உடலில் மெதுவாக இயக்கம், விறைப்பு, சமநிலை சிக்கல்கள் மற்றும் நடத்தை அல்லது மொழியில் மாற்றங்களை ஏற்படுத்தும்.

இதுகுறித்து வில்லிஸின் மனைவி எம்மா ஹெமிங் மற்றும் மகள்கள் கூறுகையில், ‘இது வேதனையாக இருந்தாலும் இறுதியாக ஒரு தெளிவான நோயறிதலைப் பெறுவதில் ஒரு நிம்மதி. FTD என்பது நம்மில் பலர் கேள்விப்பட்டிராத மற்றும் யாரையும் தாக்கக்கூடிய ஒரு கொடூரமான நோயாகும்.

60 வயதிற்குட்பட்டவர்களுக்கு FTD டிமென்ஷியாவின் மிகவும் பொதுவான வடிவமாகும். மேலும் நோயறிதலைப் பெறுவதற்கு பல ஆண்டுகள் ஆகலாம் என்பதால், FTD என்பது நமக்கு தெரிந்ததை விட அதிகமாக இருக்கலாம்’ என தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த நோய்க்கு சிகிச்சை எதுவும் இல்லை என்று கூறும் அவரது குடும்பத்தினர், எந்தவொரு ஊடக கவனமும், அதிக விழிப்புணர்வு மற்றும் ஆராய்ச்சி தேவைப்படும் நோயின் மீது வெளிச்சம் போட முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

புரூஸ் வில்லிஸிற்கு இந்த நோய் இருப்பதை அவரது குடும்பத்தினர் வெளிப்படுத்திய பின்னர், முதல் முறையாக அவர் பொதுவெளியில் காணப்பட்டார்.