அதிக வட்டி விகிதங்கள் மற்றும் வரிகளால் பாதிக்கப்பட்ட கடன் பெற்றவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இரண்டு சுற்று நிருபங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
விசேட ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
அதிக வட்டி மற்றும் வரி விதிப்பால் கடன் பெற்றவர்கள் கடனை செலுத்த முடியாமல் சிரமப்படுவதாக முறைப்பாடுகள் கிடைக்கின்றன. அவர்களுக்காக ஏற்கனவே இரண்டு புதிய சுற்று நிருபங்கள் வௌியிடப்பட்டுள்ளன.. இதை கருத்தில் கொண்டு வங்கிகளில் இருந்து கடனை பெற்றவர்களுக்கு ஏதாவது ஒருவித கடன் நிவாரணத்தை வழங்கவும். கடனை மறுசீரமைத்து அவர்களுக்கு நிவாரணம் கொடுக்கவும்.”
“சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டம் தொடர்பில் நாங்கள் செய்ய வேண்டிய அனைத்து வேலைகளையும் செய்துவிட்டோம்.” “மிகவும் வெற்றிகரமாக முன்னேற சந்தர்ப்பம் கிடைக்கும் என நாம் எதிர்ப்பார்கிறோம்.´´