மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலைமன்னார் பிரதான வீதியின் ஆடை தொழிற்சாலையின் பின் பகுதியில் உள்ள களப்பு பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை (27) காலை ஒரு தொகுதி கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளதோடு, சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபரிடம் இருந்து 41 கிலோ 620 கிராம் கேரள கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர் விபுர்த்தி (83790) கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின் போது குறித்த கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டது.
மன்னார் மாவட்ட பதில் கடமை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ASP பிரபாத்விதானகே வின் பணிப்பில், மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி பொ.ப.ரத்நாயக ,பொ.சா. ரத்னமணல தலைமையிலான அணியினரே மேற்படி கேரள கஞ்சா மற்றும் சந்தேக நபரையும் கைது செய்து உள்ளனர்.
சந்தேகநபர் கருங்கண்டல் வண்ணாங்குளம் பகுதியை சேர்ந்த 25 வயதுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்படி கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட கஞ்சா என்பன மேலதிக விசாரணையின் பின் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளது.