போராட்டத்தை கண்ணீர் புகை நீர்த்தாரை பிரயோகத்தின் மூலம் தோற்கடிக்க முடியாது

169 0

அதிகாரம் ராஜபக்சாக்களிற்கும் பிரேமதாசாக்களிற்கும் இடையில் பரிமாறிக்கொள்ளப்படும் விடயமாக காணப்பட்டால் அவர்கள் தேர்தலை ஒருபோதும் ஒத்திவைக்கமாட்டார்கள். 

மக்களின் சிறந்த எதிர்காலத்திற்காக  உள்ளூராட்சிதேர்தலிற்கான போராட்டத்தில் எந்த வழிமுறையையும் பயன்படுத்தி வெற்றிபெறுவோம் எனஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.

லிப்டன் சதுக்கத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் இதனை தெரிவித்துள்ள அவர்   உள்ளூராட்சிதேர்தலை அரசாங்கம் நடத்தச்செய்வதற்கான போராட்டத்தை கண்ணீர் புகைபிரயோகத்தின் மூலம் தடுக்க முடியாது பின்வாங்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

 

மருந்துகள் இன்றி மடியும் மக்களிற்காக வேலைவாய்ப்பின்றி காணப்படும் இளைஞர்களிற்காக துன்பத்தில் சிக்குண்டுள்ள விவசாயிகள் மீனவர்கள் உழைக்கும் மக்களிற்காக நாங்கள் உள்ளுராட்சி சபை தேர்தலிற்கான இந்த போராட்டத்தில் வெற்றிபெறுவோம் எனவும் அவர் ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றுகையில் தெரிவித்துள்ளார்.

ஊழல் இல்லாத போதைப்பொருள் இல்லாத பொதுமக்கள் பணம் கொள்ளையடிக்கப்படாத நாட்டை உருவாக்குவதற்கான போராட்டத்தில் நாங்கள் வெற்றிபெறுவோம்,இது இந்த தலைமுறையின் கடமை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எந்த வழிமுறையையும் பயன்படுத்தி இந்த போராட்டத்தில் நாங்கள் வெற்றிபெறுவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து தொழில்சார் துறையினர் படையினர் விவசாயிகள் மீனவர்கள் உட்;பட அனைவரும் தங்களது ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்காக தேசிய மக்கள் சக்தியின் பின்னால் அணிதிரளவேண்டும் எனவும் ஜேவிபியின் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டிலிருந்து குடும்ப ஆட்சியை அகற்றுவதற்காக பெருமளவு மக்கள் தேசிய மக்கள் சக்தியுடன் இணைவதால் அச்சமடைந்துள்ள அரசாங்கம் உள்ளூராட்சி  தேர்தலை ஒத்திவைப்பதற்காக சதிசெய்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை அதிகாரம் என்பது ஒரு சில குடும்பங்களிற்கு இடையில் பரிமாறிக்கொள்ளப்படும் விடயமாக காணப்படுகின்றது என தெரிவித்துள்ள அனுரகுமார திசநாயக்க முதல் தடவையாக மக்கள் வறிய மக்களிற்கான அரசாங்கத்தை அமைப்பதற்கு முன்வந்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகவே அரசாங்கம் அதிக கலக்கமடைந்துள்ளதுஎனவும் அவர் தெரிவித்துள்ளார்

அதிகாரம் ராஜபக்சாக்களிற்கும் பிரேமதாசாக்களிற்கும் இடையில் பரிமாறிக்கொள்ளப்படும் விடயமாக காணப்பட்டால் அவர்கள் தேர்தலை ஒருபோதும் ஒத்திவைக்கமாட்டார்கள் எனவும் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தலை ஒருமாதத்திற்கோ அல்லது அதற்கு மேற்பட்ட காலத்திற்கோ ஒத்திவைக்க ரணில்விக்கிரமசிங்கவினால் முடியாது மேலும் அதிகளவான பொதுமக்கள் எங்களுடன் இணைந்துகொள்வார்கள் என அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.