நாகூர் தர்காவின் 460-வது ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு ஊர்வலம் மார்ச் 9-ஆம் தேதி நடைபெறுகிறது.
நாகூர் தர்காவின் 460-வது ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. நாகை மாவட்டத்தில் உள்ள நாகூர் தர்காவின் பிரபல திருவிழாவான கந்தூரி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. நாகூரில் உள்ள பாதுஷா சாகிபு தர்காவில் கந்தூரி விழாவிற்கான கொடியேற்றம் வெகு விமரிசையாக நடைபெற்றது. உலக புகழ்ப் பெற்ற நாகூர் தர்காவின் கந்தூரி விழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுது வழக்கமே.
இதில் விழாவின் தொடக்கத்தில் நடைபெறும் கொடியேற்றம் மற்றும் சந்தனக்கூடு ஊர்வலம், சந்தனம் பூசும் நிகழ்ச்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். கொடி ஊர்வலத்திலும், கொடியேற்றத்திலும் திரளான மக்கள் பங்கேற்பதால் மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளுள் ஒன்றான சந்தனக்கூடு ஊர்வலம் வரும் மார்ச் 9-ஆம் தேதி நடைபெறுகிறது. சந்தனம் பூசும் விழா மார்ச் 10-ஆம் தேதியும், புனித கொடியை இறக்கும் நிகழ்ச்சி மார்ச் 13-ஆம் தேதி நடைபெறுகிறது.