சிங்களமக்கள் நின்மதியாக வாழவேண்டும் என்றால் தமிழ்மக்களின் பிரச்சனை தீர்க்கப்பட்வேண்டும் – மைத்திரி

484 0

maithiri ki- kiu - 3நாட்டில் தமிழர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதன்மூலமே சிங்களவர்கள் நிம்மதியாக வாழமுடியுமென சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.கிளிநொச்சியில் ஜேர்மன் அரசாங்கத்தின் 8மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்ட இலங்கை-ஜேர்மன் தொழிநுட்ப பயிற்சி நிலையத்தை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல் கவலையளிக்கின்றது. இதுபோன்ற சம்பவங்கள் நடக்காதவாறு அனைத்துப் பல்கலைக்கழகங்களும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.பல்கலைக்கழகங்களும் கல்வி நிறுவனங்களும் நாட்டின் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் மத்திய நிலையங்களாக இயங்க வேண்டும். அதேவேளை பாடசாலை கல்வித் திட்டத்தில் தேசிய நல்லிணக்கமும் ஒரு பாடமாக உள்ளடக்கப்பட வேண்டும்.

அத்துடன் நாட்டில் வாழும் அனைத்து இன, மத மக்களினதும் பிரச்சனைகளுக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுக்கவேண்டும். அப்போதுதான் பௌத்த மக்கள் இங்கே நிம்மதியாக வாழமுடியும். வடபகுதி மக்களுக்கு பிரச்சனையுள்ளதை நான் ஏற்றுக்கொள்கின்றேன். இவ்வாறு ஏற்றுக்கொள்வதே பிரச்சனையைத் தீர்ப்பதற்கான முதல் வழியாகும் எனவும் தெரிவித்தார்.மேலும், ஜனாதிபதித் தேர்தலின்போது வழங்கிய உறுதிமொழியையும், இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதிலும் பின்னிற்கமாட்டேன் எனவும் தெரிவித்தார்.

maithiri ki- kiu - 1 maithiri ki- kiu - 2 maithiri ki- kiu - 4