இவர்கள் முட்டாள்களும் அல்லர்
இவர்கள் செயல் பையித்தியக்காரத்தனமும் இல்லை.
இவர்கள் ஈழத் தமிழர்கள். இவர்கள் புலம் பெயர்ந்து வாழ்பவர்கள். இவர்கள் ஈழத் தமிழருக்கு நீதி கோரி ஜெனிவாவுக்கு சயிக்கிளில் செல்கிறார்கள்.
ஒரு மணித்தியாலம் உழைத்தால் ஆகக்குறைந்தது 8 பவுண்ஸ் சம்பளம் பெறலாம். ஒரு நாiளைக்கு எட்டு மணி நேரம் உழைத்தால் 64 பவுண்ஸ் உழைக்கலாம்.
அதாவது ஒரு நாளைக்கு 11840 ரூபா உழைப்பதை விட்டு தமிழ் மக்களுக்காக இவர்கள் சயிக்கிளில் சென்று பரப்புரை செய்கிறார்கள்.
இவர்கள் விரும்பியிருந்தால் வேலையும் தன் குடும்பமும் என்று இருந்திருக்கலாம். ஆனால் அப்படி இல்லாமல் இன உணர்வுடன் செயற்படுகின்றார்கள்.
இவர்கள் விரும்பியிருந்தால் நண்பர்களுடன் சேர்ந்து தண்ணியடிச்சு பிறந்தநாள் கொண்டாடி மகிழந்;திருக்கலாம்.
இவர்கள் விரும்பியிருந்தால் சினிமா பாடகர்கள் அல்லது நட்சத்திரங்களை அழைத்து கச்சேரி நடத்தியிருக்கலாம்.
இவர்கள் விரும்பியிருந்தால் குடும்பத்துடன் கோயில் சென்றுவிட்டு அப்படியே சரவணபவனில் சாப்பிட்டுவிட்டு ஒரு சினிமாப் படத்தையும் பார்த்து மகிழ்ந்திருக்கலாம்.
இவர்கள் விரும்பியிருந்தால் கோட்டு சூட்டு போட்டுகொண்டு விமானத்தில் ஜெனிவா போய் இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தால் இலங்கை அரசின் அன்பளிப்புகளை பெற்றிருக்கலாம்.
ஆனால் கடுங் குளிருக்கு மத்தியிலும் மழையில் நனைந்து புயலில் சிக்கி ஆபத்தான இந்த சயிக்கிள் பவனியை நடத்துகிறார்கள்.
இவர்களின் இந்த அர்ப்பணிப்பை இன உணர்வு உள்ளவர்களால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்.
புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் தமிழன் தன் கடமையை மறக்கவில்லை என்பதை இவர்களின் போராட்டம் காட்டுகிறது.
பாராட்டுகள் உறவுகளே!
பாலன் தோழர்