மனிதநேய ஈருருளிப்பயணம் பிரான்சு நாட்டின் எல்லையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றது.

322 0

17.2.2023 அன்று லண்டனில் ஆரம்பித்த மனிதநேய ஈருருளிப்பயணம் இன்று யேர்மனியின் முக்கிய நகரங்களில் உள்ள நகர முதல்வர்களைச் சந்தித்து சிறிலங்கா இனவாத அரசினால் தமிழீழமக்கள்மேல் நாடாத்தப்பட்ட தமிழின அழிப்புக்கு அனைத்துலக சுயாதீன பொறிமுறை மூலம் நீதி வழங்குமாறு மனுக்கள் கையளிக்கப்பட்டது.

அந்த வகையில் யேர்மனி சார்புறுக்கன் நகரிலிருந்து நேற்றைய தினம் லன்டோ நகரை வந்தடைந்த ஈருருளிப்பயணப் போராட்ட அணி, லன்டோ மாநகர முதல்வரைச் சந்தித்து மனு கையளித்ததுடன் தொடர்ந்து கால்ஸ்றூவ நகரம் நோக்கிப் பயணித்து அந்நகர மாநில முதல்வர் அலுவலகத்தில் மனுவைக் கையளித்து தொடர்ந்து பிரான்சு நாட்டின் எல்லையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றது.

இப் போராட்ட அணியானது பிரான்சு நாட்டைக் கடந்து சுவிஸ் நாட்டுக்குள் பயணித்து மார்ச் 6ஆம் திகதி ஜெனிவாவில் ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் நடைபெறயிருக்கும் போராட்டத்துடன் இணைந்து கொள்கின்றது.