களுத்துறை துப்பாக்கி சூட்டுச் சம்பவம் தொடர்பில் மஹிந்த

275 0

களுத்துறை துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் உள்ளக இரகசியம் காணப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

தியத்தலாவ நகரில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் இதனை குறிப்பிட்டார்.

வடக்கில் இடம்பெற்ற மனித கொலைகளை நிறுத்தினோம்.

அதுமாத்திரமல்ல தெற்கிலும் பாதள குழுவை இல்லாது செய்தோம்.

இன்று காவல்துறையினரின் சீருடையில் வந்து, சிறை கைதிகளை கொலை செய்கிறார்கள்.

அந்த கொலையுடன் அரசியல் தொடர்பு உள்ளது எனவும் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டார்.