களுத்துறையில், சிறைச்சாலை பேரூந்து மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல், அங்கொட லொக்கா மற்றும் கம்புறுபிட்டி மடுஸ் என்ற பெயர்களில் அழைக்கப்படும் இரண்டு பாதாள உலக குழு தலைவர்களின் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டது என தெரியவந்துள்ளது.
விசாரணைகளை மேற்கொள்ளும் உயர் அதிகாரி ஒருவர் இதனை தெரிவித்துள்ளார்.
அங்கொட லொக்கா கடுவளை பிரதேசத்தில் வசித்து வருவதுடன் கம்புறுபிட்டிய மடுஸ் தெற்கில் இடம்பெறும் பல குற்றச்தசெயல்களுடன் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளது.
களுத்துறை சிறைச்சாலை பேருந்து மீது நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் அருண தமித் உதயங்க பத்திரன எனப்படும் சமயங் உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்தமை குறிப்பிடதக்கது.