கல்வேவ சிறிதம்ம தேரரின் மனுவை விசாரணைக்கு எடுக்காமலேயே நிராகரித்த உயர் நீதிமன்றம்!

195 0

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பிக்கு மாணவர் சம்மேளன அழைப்பாளர் கல்வேவ சிறிதம்ம தேரரால் முன்வைக்கப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை நிராகரிக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

துரைராஜா, மஹிந்த சமயவர்தன மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாமினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதன் மூலம் தனது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு கோரி கல்வேவ சிறிதம்ம தேரர்  இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.