விக்கிரமசிங்க மலரஞ்சலிசாலையில் உள்ளூராட்சிமன்ற தேர்தலின் உடல்

101 0

நாட்டில் தோற்றம் பெற்ற 30 வருடகால யுத்தம், இனகலவரங்கள் ஆகியவற்றுக்கு ஐக்கிய தேசியக் கட்சியே தலைமை தாங்கியது.

உள்ளூராட்சிமன்ற தேர்தலின் உடல் விக்கிரமசிங்க மலரஞ்சலி சாலையில் வைக்கப்பட்டுள்ளது. அமைதியற்ற வரலாற்று சம்பவத்திற்கு அழைப்பு விடுப்பதை ஜனாதிபதி தவிர்த்துக் கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும சபையில் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (23) இடம்பெற்ற அத்தியாவசிய சேவைகள் தொடர்பான ஜனாதிபதியின் கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

உலகில் பொய்யுரைப்பது மூன்று வகையாக காணப்படுகிறது.பொய்,தர அடிப்படையினால பொய், மற்றும் அப்பட்டமான பொய் என்று அவை வகைப்படுத்தப்படும்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சபையிக்கு வருகை தந்து மூன்றாவது வகையான அப்பட்டமான பல பொய்களை குறிப்பிட்டார்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல்  திகதி உத்தியோகப்பூர்வமான அறிவிப்பு விடுக்கப்படவில்லை,நாட்டில் தேர்தல் என்பதொன்று இல்லை என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்படவில்லை என்றால் ஐக்கிய தேசியக் கட்சி ஏன் கட்டுப்பணம் செலுத்தி,வேட்பு மனுத்தாக்கல் செய்தது,

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடவடிக்கைகளுக்கு  திறைச்சேரியின் செயலாளர்,அரச அச்சகத் திணைக்களத்தின் தலைவர் தடையாக செயற்படுகிறார்கள் என குறிப்பிடப்பட்டது, ஆனால் ஜனாதிபதியின் கருத்தை தொடர்ந்துதேர்தலை பிற்போடும் முயற்சியை யார் செயற்படுத்துகிறார் என்பதை நாட்டு மக்கள் அறிந்துக் கொண்டுள்ளார்கள்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலின் உடன் விக்கிரமசிங்க மலர்சாலையில் தற்போது வைக்கப்பட்டுள்ளமை தெளிவாகியுள்ளது. ஜனநாயகத்திற்கு முரனாக செயற்படும் போது ஏற்படும் பாரிய விளைவுகள் தோற்றம் பெற்றுள்ளன. இதற்கு பல சம்பவங்கள் எடுத்துக்காட்டாக காணப்படுகின்றன.

நாட்டு மக்களின் அடிப்படை வாக்குரிமை பிற்போட்டதன் பின்னணியில் தான் நாட்டில் யுத்தம் தோற்றம் பெற்றது என்பதை எவரும் மறக்க முடியாது. வடக்கு மக்களின் வாக்குரிமை மற்றும் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டதை தொடர்ந்து ஆயுதப்போராட்டம் தோற்றம் பெற்றது. இதற்கு ஐக்கிய தேசிய கட்சியே தலைமை தாங்கியது.

நாட்டில் மீண்டும் அமைதியற்ற தன்மையை தோற்றுவிக்கும் செயற்பாடுகளை ஜனாதிபதி தற்போது முன்னெடுத்துள்ளார். தவறான வரலாற்று சம்பவத்திற்கு மீண்டும் அழைப்பு விடுக்க வேண்டாம் என ஜனாதிபதியிடம் வலியுறுத்துகிறேன் என்றார்.