நான் இறுதியாக சண்டே டைம்ஸ் சஞ்சிகையின் 50வது ஆண்டு நிறைவு நிகழ்வு கண்காட்சியில்; மேரி கொல்வினை இறுதியாக பார்த்தேன்.
லண்டனின் மிகப்பிரபலமான ஆர்ட் கலரியில் அது இடம்பெற்றது.
இரண்டு வாரங்களிற்கு பின்னர் 2012 பெப்ரவரி 22 ம் திகதி அவர் சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் பிடியிலிருந்த ஹொம்ஸ் நகரில் கொல்லப்பட்டார்.
சிரிய ஜனாதிபதி பசார் அல் அசாட்டின் படையினரின் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார்.
அவர் இருந்த இடத்தை இலக்குவைத்து தாக்குதலை மேற்கொண்டது தற்செயலாக இடம்பெற்ற விடயமல்ல .அது ஒரு கொலை.
அவர் பத்திரிகையாளர் என்பதால் அவரை மௌனமாக்குவதற்காக சிரிய அரசாங்கம் அவரை இலக்குவைத்தது என அமெரிக்க நீதிமன்றமொன்றில் பின்னர் தெரிவிக்கப்பட்டது.
மேரிகொல்வின் நிலையத்தில் நான் இயக்குநராக உள்ளமை குறித்து பெருமிதம் அடைகின்றேன்
சாட்சியாக இருப்பது மற்றும் இதழியல் துறையின் நேர்மையின் முக்கியத்துவம் குறித்த அவரது நம்பிக்கையை கொல்வின் மையத்தில் நாங்கள் பகிர்ந்துகொள்கின்றோம்.
உலகின் தலைசிறந்த தொழில் எனக்கு கிடைத்தது என அவர் தெரிவிப்பார்.உங்களால் நிச்சயம் மாற்றத்தை மேற்கொள்ள முடியும் என்பார் அவர்.
இந்த வாரம் இன்னொரு மைல்கல்லை குறிக்கின்றது.-ரஸ்யா படையினர் உக்ரைன் மீது தாக்குதலை மேற்கொண்டு ஒருவருடமாகின்றது -( 24- 2- 2022)
உக்ரைனில் நாங்கள் மேரிகொல்வினின் செய்தியறிக்கையிடலை இழந்து நிற்கின்றோம் என தெரிவிக்கின்றார் அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதிய சக பத்திரிகையாளர் லின்ட்சே ஹில்சும்.உக்ரைனில் யுத்தம் ஆரம்பமானவுடன் அவர் இதனை டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
துணிச்சல் மிக்க பத்திரிகையாளர்கள் மற்றும் புகைப்படப்பிடிப்பாளாகள் காரணமாக எங்களால் உக்ரைனில் இடம்பெறும் அநீதிகளை பொதுமக்களிற்கு எதிரான ரஸ்யாவின் யுத்த குற்றங்களை அறிந்துகொள்ளமுடிகின்றது – இவர்களில் பலர் மேரி கொல்வினின் நண்பர்கள்.
இலங்கை ஆப்கானிஸ்தான் செச்னியா ஈராக் லெபனால் உட்பட உலகின் மிகவும் கொந்தளிப்பான பகுதிகளில் செய்திசேகரிப்பில் ஈடுபட்டிருந்தபோதிலும் மேரி கொல்வின் தனது மனிதாபிமானத்தை ஒருபோதும் இழந்துவிடவில்லை.
இலங்கையில் அவர் தனது கண்களை இழந்தார்.
1999 ம் ஆண்டு கிழக்கு திமோரில் முகாமொன்றில் சிக்குண்டிருந்த 1500 பெண்கள் குழந்தைகளை அவர் காப்பாற்றினார்.
முகாமிலிருந்து ஆண்கள் தப்பியோடிவிட்ட நிலையில் மேரிகொல்வினை அங்கிருந்து வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்ட போதிலும் அவர் அதனை ஏற்கமறுத்தார்.
தனது செய்திகளில் அவர் இந்த செய்தி குறித்தே அதிகம் பெருமைப்பட்டார்.
இளம் செய்தியாளர்கள் விடயத்தில் அவர்மிகவும் பெருந்தன்மையுடன் நடந்துகொண்டார் அவர்களை தனது பாதையில் பயணிப்பதற்கான உத்வேகத்தை வழங்கினார்.
மேரி கொல்வின் உயிரிழப்பதற்கு சில நாட்களிற்கு முன்னர் இளம் பத்திரிகையாளர் ஒருவர் அவருக்கு ஒரு மின்னஞ்சலை அனுப்பியிருந்தார்.
அதில் மேரிகொல்வினின் சிரியா குறித்த அச்சமூட்டும் செய்திகள் தன்னையும் ஒரு பத்திரிகையாளராக மாற்றியது என அவர் குறிப்பிட்டிருந்தார்.
நன்றி என அதற்கு பதிலளித்த மேரி உங்களை போன்ற இளம் பத்திரிகையாளளர்களை முன்னோக்கி நகர்த்துவது மிகவும் கடினமான பணி என குறிப்பிட்டிருந்தார்.