பொருளாதார சிரமங்கள் குறுகிய காலத்திற்கே

100 0

மக்கள் பொருளாதார ரீதியாக சிரமங்களை எதிர்நோக்கி வருகின்ற போதிலும் இதனை குறுகிய காலத்திற்கே எதிர்பார்க்க வேண்டும் எனவும்  இந்த வருட இறுதிக்குள் நாட்டு மக்களின் பொருளாதாரத்தை சிறந்த நிலைக்கு உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தேசிய மாணவர் படையணிக்கு ஜனாதிபதி வர்ணம் மற்றும் படையணி வர்ணம் வழங்கும் நிகழ்வு ரன்தம்பே தேசிய மாணவர் படையணி பயிற்சி நிலையத்தில் நேற்று (19) இடம்பெற்ற போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் வலுவான பொருளாதாரம் மற்றும் புதிய சமூகமொன்று உருவாக்கப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நாட்டின் இளைஞர்களுக்காக உருவாக்கப்படும் புதிய சமூகத்திற்கு, ஒழுக்கமான தலைமைத்துவத்தை மாணவர் படையணி வழங்கும் என எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.