சிறிலங்காவின் ஆட்சியாளர்களாக இருந்த, இருக்கும் போர்க்குற்றவாளிகளுக்கு எதிரான தடைகள் குறித்து எழுத்து மூல கேள்வியை,பின்லாந்தின் பாராளுமன்ற உறுப்பினர் குசைன் அல் தயீ , (Hussein al taee) பின்லாந்து பாராளுமன்றில் சபாநாயகரிடம் எழுப்பியுள்ளார்.
1948 ஆம் ஆண்டு பிரித்தானிய காலனி ஆதிக்கத்தில் இருந்து சிறிலங்கா சுதந்திரம் பெற்றதில் இருந்து ஈழத் தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமையை சிறிலங்கா அரசு மறுத்துள்ளது. சிறிலங்கா அரசின் தமிழர்கள் மீதான கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பு, அன்றிலிருந்து தொடர்கிறது. தமிழ் மக்களின் பாரம்பரிய தாயகம், கலாசாரம், வரலாறு, பாரம்பரியம் மற்றும் மொழி ஆகியவற்றை சிதைப்பதை இலக்காகக் கொண்ட கொள்கைகளை இலங்கை இனச்சுத்திகரிப்பு நோக்கத்துடன் நடைமுறைப்படுத்தி வருகிறது. 2009 மே மாதத்தில் இனஅழிப்பு உச்சத்தை எட்டியது, அக்காலப்பகுதியில் மட்டும் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர் என தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மதிப்பீடு செய்கின்றன. பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் கதி இன்னும் அறியப்படாது, காணாமலாக்கப்பட்டவர்களாக கருதப்படுகிறது.
கடுமையான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட நான்கு இலங்கைப் போர்க் குற்றவாளிகளுக்கு எதிராக போக்குவரத்துத் தடைகளை கனடா அறிவித்துள்ளது. மேலும், மே 18ஆம் நாளை தமிழர் இனஅழிப்பு நினைவு நாளாக அங்கீகரிக்கும் பிரேரணைக்கு கனேடிய நாடாளுமன்றம் ஏகமனதாக ஒப்புதல் அளித்துள்ளது. யூன் 2019 இல், கனேடிய பாராளுமன்றம், “இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனஅழிப்பு தொடர்பான குற்றச்சாட்டுகள், 2009 இல் ஆயுதப் போரின் இறுதிக் கட்டம் உட்பட, சர்வதேச சுயாதீன விசாரணையை நிறுவ” கோரும் தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றியது. 2020-2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை போர்க்குற்றவாளிகள் மீது அமெரிக்கா இதேபோன்ற தடைகளை விதித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் குற்றம் சாட்டப்பட்ட போர்க்குற்றவாளிகளை இலக்காகக் கொண்ட பொருளாதாரத் தடைகள், பயணத்தடைகளினால் இலங்கை அனைத்துலக மட்டத்தில் கடும் நெருக்கடிகளைச் சந்தித்துள்ளது.
இலங்கை போர்க் குற்றவாளிகளுக்கு எதிரான தடைகள், சிறிலங்காவில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான மிகச் சிறந்த வழிமுறைகளில் ஒன்றாகும்.
இனஅழிப்பு, போர்க்குற்றம் மற்றும் தமிழர்களுக்கு எதிரான பிற குற்றங்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்று சர்வதேச சமூகம் தொடர்ந்து கோரிக்கை விடுத்த போதிலும், இலங்கை அரசு அதனை செவிமடுக்கவில்லை.
பின்லாந்து மற்றும் உலகெங்கிலும் உள்ள தமிழ் சமூகம் கனடா மற்றும் அமெரிக்காவைப் பின்பற்றி 2020 இல் இலங்கை போர்க் குற்றவாளிகள் மீது இலக்குத் தடைகளை விதிக்குமாறு பின்லாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்துகிறது.
சக்திவாய்ந்த Magnitsky தடைகள் சட்டத்துடன்.
மேற்கூறியவற்றின் அடிப்படையிலும், பாராளுமன்றத்தின் நடைமுறை விதிகளின் § 27ஐக் கொண்டும்,இந்த வேண்டுகோளை நான் முன்வைக்கிறேன் என பாராளுமன்ற உறுப்பினர் அல்-தகீ மேலும் குறிப்பிட்டுள்ளார்.