உரிய நேரத்தில் தேர்தலை நடத்த வேண்டியது அரசின் பொறுப்பாகும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
அரசும் தேர்தல்கள் ஆணைக்குழுவும் தனித்தனியாகப் பிரிந்து செயற்படுவது போன்றே எண்ணத் தோன்றுகின்றது.
மக்களின் வாக்குரிமையை அறிந்து ஜனநாயகத் தன்மையை உறுதிப்படுத்த வேண்டியது அரசின் பொறுப்பாகும்.
எனவே, அரசு தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் இணைந்து எதிர்வரும் தேர்தலை உரிய நேரத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று அரசிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேண்டுகோள் விடுக்கின்றது என தெரிவித்துள்ளார்.