திருகோணமலையின் சம்பூரில் அமைந்துள்ள சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையத்தில் செயற்திட்ட நடவடிக்கைகள் எதுவும் நடத்தப்படாதபோதும், ஒரு கோடியே 11 இலட்சத்து 87 ஆயிரத்து 455 ரூபா அதன் நிர்வாகச் செலவுக்காக செலவிட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பூரில் 50 மெகா வொட் சூரிய மின் உற்பத்தி நிலையமொன்றை அமைப்பதற்காக 2018 ஆம் ஆண்டு நிறுவனமொன்றுக்கு வழங்குவதற்கான அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெற்றிருந்தது.
இருந்தபோதிலும், 2022 மார்ச் 31 ஆம் திகதி வரையிலும் அங்கு எந்த விதமான செயற்பாடுகளும் ஆரம்பித்திருக்கப்படவில்லை என தேசிய கணக்காய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தத் தேதியில் அந்நிறுவனத்தின் நஷ்டம் 61 கோடியே 52 இலட்சத்து 5 ஆயிரத்து 830 ரூபா என கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருகோணமலை மின்சார நிறுவனம் தொடர்பாக 2021/2022 ஆம் ஆண்டிற்கான கணக்காய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.