பூகம்ப இடிபாடுகளிற்குள் இருந்து மீட்கப்பட்ட பின்னர் குழந்தையை பிரசவித்த பெண்

121 0

துருக்கி பூகம்ப இடிபாடுகளிற்குள் இருந்து மீட்கப்பட்ட சில மணிநேரங்களில் பெண்ணொருவர் குழந்தையை பிரசவித்துள்ளார்.

யுத்தம் காரணமாக யேமனியிலிருந்து தப்பியோடி துருக்கியில் அடைக்கலம் புகுந்த பெண் ஒருவரே  பூகம்ப இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டு பத்து மணிநேரத்தின் பின்னர்  குழந்தையை பிரசவித்துள்ளார்.

பட்டன் அல் யுசுவி என்ற 30 மாதகர்ப்பிணி தனது குழந்தையின் வரவிற்காக தயாராகிக்கொண்டிருந்தவேளை  பூகம்பத்தில் சிக்குண்டார்.

இன்னமும் பிறக்காத தனது குழந்தை குறித்து அச்சத்துடன் காணப்பட்ட உடல்உளரீதியாக பாதிக்கப்பட்டிருந்த அவரை மீட்பு பணியாளர்களும் குடும்ப நண்பர் ஒருவரும் இடிபாடுகளில் இருந்து மீட்டனர்.

நான் உயிருடன் இருக்கின்றேன் என்பதை நான் இன்னமும் நம்பவில்லை என அவர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.

மீட்கப்பட்ட அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு அவர் சிசேரியன் முறை மூலம் பெண் குழந்தையை பிரசவித்தார், அந்த குழந்தைக்கு லுஜெய்ன் என பெயரிட்டுள்ளனர்.”silver” in Arabic. ஆனால் பின்னர் அவர் துயரத்தை சந்தித்தார்.

 

ஹிசாம் தனது கணவர் பட்டெனை மீட்பதற்காக வந்தார் – அங்கு அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது அவரது வீட்டின் மீது அருகில் உள்ள தொடர்மாடி இடிந்து விழுந்திருந்தது.

அவரது கணவர் உயிரிழந்துவிட்டார், மூன்று நாட்களின் பின்னர் அவரது உடல் மீட்கப்பட்டது.

குழந்தைக்கு பாலூட்டவேண்டிய புதிய விடயங்களிற்கு பழகவேண்டிய நிலையில் உள்ள அவர் உறக்கத்தை பறிகொடுத்துள்ளார்.

ஆரம்பத்தில் இது கடினமாக காணப்பட்டது என்கின்றார் அவர்.

எனக்கு ஆதரவாக இருந்த உதவிய அனைவருக்கும் நன்றி என தெரிவிக்கும் அவர் எனக்கென்று குடும்பமொன்று இல்லாத போதிலும குடும்பத்தவர்கள் போல பலர் செயற்பட்டனர் என்கின்றார்.

எங்கள் மகளிற்கான சிறந்த எதிர்காலம் குறித்து நாங்கள் கனவு கண்டோம் ஆனால் எங்களிற்கு மேல் கடவுளிருக்கின்றார் எங்கும் இருக்கின்றார் முடிவு எங்கே இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது என்கின்றார் அவர்.

பூகம்பத்திலிருந்து உயிர்தப்பியவர்கள் லுஜெய்ன்ஸ் பிறந்ததை அறிந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்