மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய மகா சிவராத்திரி நிகழ்வு குறித்து ஆராயும் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமெல் தலைமையில், மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய மண்டபத்தில் நேற்றைய தினம் (14.02.2023) இக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, எதிர்வரும் 18ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள மகா சிவராத்திரி குறித்தும் அதில் முன்னெடுக்கப்படவேண்டிய ஏற்பாடுகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.
அதன்படி, அரச – தனியார் போக்குவரத்துக்கள், பாதுகாப்பு, குடிநீர், சுகாதாரம், உணவு உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.
கடந்த காலங்களை விட இம்முறை இலட்சக்கணக்கான மக்கள் நாடளாவிய ரீதியில் இருந்து வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறமையினால் அதற்கான முன் ஆயத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.குறித்த கலந்துரையாடலில் திருக்கேதீஸ்வர ஆலய நிர்வாகம், அழைக்கப்பட்ட துரை சார் திணைக்கள அதிகாரிகள் பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.