கிளிநொச்சி – பூனாரின் பகுதியில் காதலர் தினத்தை கொண்டாடுவதற்காக தனது காதலிக்கு போதைப்பொருள் கலந்த சொக்லேட்டை கொடுத்து இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து துஷ்பிரயோகம் செய்ததாக சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
14 வயது காதலியை 17 வயது காதலன் அழைத்ததாகவும், அவர் மயக்கமடைந்த பின்னர், தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாலியல் பலாத்காரத்திற்குள்ளான சிறுமியின், காதலன் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும் அப்பகுதியில் போதைப்பொருள் வியாபாரி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவருடன் இணைந்து சிறுமியை துஷ்பிரயோகம் செய்த மற்றைய இரு இளைஞர்களும் பிரதான சந்தேக நபருடன் இணைந்து போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள் என தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.