ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா இந்திய உயர்ஸ்தானிகராலயத்துக்கு கடிதம் ஒன்றை கையளித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் ஜனநாயக விரோதமான முறையில் தேர்தலை நடத்தாமல் அதனை ஒத்திவைக்கும் முயற்சியை இந்திய உயர்ஸ்தானிகராலயம் தலையிட்டு தடுத்து, இந்த நாட்டு மக்களுக்கு ஜனநாயக உரிமைகளை வழங்க உதவுமாறு கோரும் கடிதம் ஒன்றையே அவர் கையளித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர், ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து தேர்தலை ஒத்திவைக்க சதி செய்கின்றன. தேவையில்லாத பணத்தை செலவழிக்கும் அரசு, தேர்தலை நடத்த தம்மிடம் பணம் இல்லை என கூறுவது கேலிக்கூத்தானது என்றார்.