கொழும்பு -9 தெமட்டைகொடயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகம் மீது இன்று (15) அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
திடீரென உள்ளே நுழைந்த பலர் அலுவலகத்தில் இருந்த விளம்பர பலகைகளை கடுமையாக சேதப்படுத்தியதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை மிரட்டி அலுவலகங்களை சேதப்படுத்தும் நோக்கில் குழுக்களை களமிறக்குவதன் மூலம் ஜனாதிபதி புதிய கலாசாரத்தை உருவாக்கியுள்ளதாகவும் முஜிபுர் ரஹ்மான் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி மாளிகையை எரித்த சம்பவம் தொடர்பில் சக வேட்பாளர் ஒருவர் இன்று (15) குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.