பதுளை பொது வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் 145 போதை மாத்திரைகளை காரில் கொண்டு சென்றபோது இன்று (15) இரவு பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாடசாலை மாணவர்களையும் இளைஞர்களையும் இலக்கு வைத்து இவற்றை விற்பனை செய்ய அவர் முயற்சித்தார் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக நீண்ட நாட்களாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட நிலையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மருத்துவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 150 மில்லிகிராம் போதைப்பொருள் அடங்கிய 150 மாத்திரைகளுடன், நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக பதுளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பதுளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.